தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் இளையதளபதி விஜய். இவரது பெயரை சொன்னாலே போதும் ரசிகர்கள் ஆரவாரம் ஆகிவிடுவர். விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார்.

கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். பின் தமிழ் சினிமாவில் எப்படியோ தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்

தன்னை போலவே தன் மகனையும் குழந்தைப் பருவத்திலே போக்கிரி படத்தில் அறிமுகம் செய்தார்..அவரின் குடும்பம் பற்றி நாம் எல்லோருமே அறிந்தது தான் .

ஆனாலும் மகன்,மற்றும் மகள் சிறு வயது புகைப்படங்களை மட்டுமே நாம் பார்த்து ரசித்திருக்கிறோம் .தற்போது நம்ம தளபதி மகன் சஞ்சய் எப்படி இருக்கிறார் தெரியுமா..

அனைவரும் அசந்து போகும் அழகிலும் உயரத்திலும் இருக்கிறார் என்று சொன்னால் மிகை இல்லை… தற்போது +2 படிக்கும் சஞ்சய் சமீபத்தில் லண்டனில் தனது அம்மாவின் உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் நடிகர் விஜய்யின் உயரத்தில் சஞ்சய் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்க வைத்திருக்கிறது..மெர்சல் பட விஜயை போலவே முறுக்குடன் இருப்பதால் இவரையும் விரைவில் திரையில் ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

இப்போதைய புகைப்படம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here