கடந்த வெள்ளியன்று மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலைய நடைபாதை மேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலின் போது அதில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணிடம் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக வெளியான வீடியோவினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்த நிலையில், அந்த கோர சம்பவத்தில் சிக்கித் தவித்த பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடும் அப்பெண்ணுக்கு உதவி செய்யாமல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியவரை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒருவர் மேல் ஒருவர் விழுந்து உடல்கள் மேலே மேலே குவிந்ததில் மேலே சிக்கிய பெண் ஒருவர் தன்னைக் காப்பாற்றுமாறு கையை பலவீனமாக உயர்த்தியதும், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்று பாராமல் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தது குறித்த வீடியோ வெளியானதில் பலரும் கொந்தளித்துள்ளனர். இந்தப் பெண் கடைசியில் இறந்து போனார்.

அந்தத் தருணத்தில் அங்கு இருந்த ஜெயஸ்ரீ கனாடே இது குறித்துக் கூறும்போது, “நெரிசலில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்களிடமிருந்து பர்ஸ், நகைகள் ஆகியவற்றை சிலர் களவாடிச் சென்றனர். ஆனால் இந்த பாலியல் தொந்தரவு வீடியோ உண்மையில் அவலமானது, துயரமானது, வெட்கக் கேடானது. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் ஒருவர் இப்படி நடந்து கொள்ள எப்படி மனம் வரும்? குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும்” என்றார்.

எல்பின்ஸ்டோன் சாலை பகுதியைச் சேர்ந்த சந்தேஷ் பஹதூர் என்பவர் கூறும்போது, “பாலியல் தொந்தரவு வீடியோ உண்மையில் வெட்கக் கேடானது, அதைப் பார்க்காமலேயே கூட இத்தகைய பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஈவு இரக்கமற்ற கோழை தண்டிக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. நாங்கள் உதவி செய்ய ஓடினோம். பெண்கள் உதவிக்காகக் கதறினர், ஆனால் மேம்பாலத்தில் இருந்த நெரிசலினால் நாங்கள் பலரைக் காப்பாற்ற முடியவில்லை” என்றார்.

அஞ்சலி பாதுரியா என்ற மற்றொருவர் கூறும்போது, “தசரா என்பதால் பெண்கள் பலரும் புடவைக் கட்டியிருந்தனர். உடல்களின் குவியலிலிருந்து அவர்களை மீட்கும் போது அவர்கள் புடவைகள் கிழிந்தன” என்றார்.

இந்தப் பாலியல் தொந்தரவு வீடியோ பயணிகள் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட போது கடும் கோபம் வெளிப்பட்டது.

ரயில்வே போலீஸ் கமிஷனர் நிகேத் கவுஷிக், கூறும்போது, “இந்த வழக்கு மும்பை போலீஸ் கையில் உள்ளது, இருந்தாலும் நானும் விசாரணையை தொடங்குகிறேன்” என்றார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

Source: tamil.thehindu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here