சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை பொதுவாக அனைவருக்கும் ஏற்படுவதுண்டு.

அந்த ஆசை சின்னத்திரை சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கும் இருந்ததாம். அவர் சமீபத்தில் காலா படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டாரை சந்தித்து அவருக்கு முத்தம் வழங்கி செல்பி எடுத்துள்ளார்.

இந்நிலையில் காலா படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த சைத்ரா ரெட்டி அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இவர் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்தார். தற்போது யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here