விக்கேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசர், டிரைலர், இசை வெளியீடு, படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

 

ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’.

விக்கேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள், டீசர், டிரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் விக்கேஷ் சிவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

அன்பான ரசிகர்கள் ஆசைப்பட்டதால் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் அக்டோபர் மாதமும், நவம்பரில் டீசரும், இசை வெளியீடு மற்றும் டிரைலர் டிசம்பரில் நடக்க இருக்கிறது. இதற்கிடையே அவ்வப்போது பாடல்கள் வெளியாகும்.

அதனைத் தொடர்ந்து படம் வருகிற பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்.

நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here