ஆஸ்திரேலிய தொடருக்கு எதிரான இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான ஒட்டுமொத்தமாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

வரும் 17ம் தேதி துவங்க உள்ள இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் இன்று திடீரென இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தனது மனைவியின் உடல் நலம் சரி இல்லாததால் தவான் சிறிது ஓய்வு கேட்டதாகவும் அதன் அடிப்படையில் தான் பி.சி.சி.ஐ., தவானை நீக்கியுள்ளதாகவும் பி.சி.சி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here