பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக புகழன் உச்சதிற்கு சென்றவர் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் ஓவியா,அவரை மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்து வர அவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு ஓவியா மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாயின.

இவர் தற்போது எங்கு சென்றாலும் ரசிகர்கள் புகைப்படங்கள் எடுத்து கொண்டு அதனை இணையத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். மேலும் இவரிடம் ரசிகர்கள் டிவிட்டரில் லைவ் ஷேட் செய்ய கூறி வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் செட்படம்பர் 30ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாள். இந்த சீசனின் இறுதி நிகழ்ச்சியும் இதுதான். அன்றைய நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ட்விட்டரில் பிக்பாஸ் 100 வது நாள் முடிந்தததும் சாட்  செய்யலாம் எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் இறுதி நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.

இவரது இந்த டிவீட் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here