மெக்சிகோ நிலநடுக்க மீட்புப் பணியில் ராக் ஸ்டாரான ஃப்ரைடா மோப்ப நாய்

மெக்சிகோவை புரட்டி போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்க மீட்புப் பணியில் ஃப்ரைடா என்ற மோப்ப நாய் செய்துள்ள சிறப்பான பணிக்காக சமூக வலைதளங்களில் ராக் ஸ்டாராகியுள்ளது. மெக்சிகோவில் கடந்த செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ சிட்டியின் 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் குலுங்கி மண்ணுடன் மண்ணாக சரிந்தன. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 290 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ நகரமே உருக்குலைந்துள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கால்களில் பூட்ஸ் அணிந்ததன் மூலம் பிரபலமான 7 வயது மஞ்சள் லேப்ரடார் மோப்ப நாயான ஃப்ரைடா சிலர் உடலில் குத்திக் கொள்ளும் டாட்டூ அளவிற்கு பிரபலமடைந்துள்ளது. தன்னுடைய வாழ்நாளில் ஃப்ரைடா 12 பேரை உயிருடன் மீட்டுள்ளது மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 40 பேரின் உடல்களையும் கண்டுபிடிக்க உதவியுள்ளதாக மெக்சிகோ கடற்படையினர் கூறியுள்ளனர்.

ஃப்ரைடா இன்னும் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருவதாக மெக்சிகோ கடற்படை கேப்டன் கூறியுள்ளார். தெற்கு மெக்சிகோ பகுதியில் நடந்த விபத்து ஒன்றில் 11 குழந்தைகளை மீட்கவும் ஃப்ரைடா உதவியுள்ளது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here