விஜயின் மெர்சல் டீசர் வெளியாகி சில மணி நேரத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. டீசர் வெளியான 24 மணி மணி நேரங்களில் 7,33,000 லைக்குகள்; 1 கோடியே 14 லட்சம் பார்வைகள் பெற்று யூ-ட்யூப் ட்ரெண்டிங் லிஸ்டில் முதலிடத்தில் உள்ளது. யூடியூபில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்கிற சாதனையைப் படைத்துள்ளது மெர்சல் டீசர்.

இந்த நிலையில் மெர்சல் என்ற பெயரை தேனாண்டாள் நிறுவனம் தனது படத்திற்கு பயன்படுத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்து.தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் அக்.3ம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என ஐகோர்ட் தடை விதித்து உள்ளது.

இதனிடையே, மெர்சல் படத்தின் டீசர் யூ-ட்யூபிலிருந்து நீக்கப்பட்டது. காப்புரிமை பெறப்பட்ட விஷயங்கள் இந்த வீடியோவில் இருப்பதால் இந்த வீடியோ நீக்கபட்டுள்ளது என்ற தகவல் மட்டுமே தெரிந்தது. பிறகு, சில நிமிடங்களில் மீண்டும் டீசர் வீடியோ ஒளிப்பரப்பாக தொடங்கியது.

டீசர் வீடியோ திடீரெனே நீக்கப்பட்டது ரசிகர்களை சில நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here