திருமணம் என்பது ஒவ்வொருவருக்குமே கனவு என்று சொல்லலாம். திருமணம் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் நிறையவே இருக்கும். யாரென்றே தெரியாத அதாவது இதற்கு முன்னால் அறிமுகமில்லாத ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து காட்டுவது தான் இதில் இருக்கும் மிகப்பெரிய சவால்.

பெண்கள் தங்கள் பிறந்த வீட்டை விட்டு இன்னொரு வீட்டிற்கு செல்ல வேண்டும். புதிய சூழலை பழகிக்கொள்ள வேண்டும் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் எல்லாம் நிறையவே இருக்கும். ஆனால் இங்கே பார்க்கப் போகும் கிராமத்தில் அப்படியான எந்தசிக்கலும் இல்லை.

இந்த கிராமத்தில் பெண்கள் தங்களின் தந்தையையே திருமணம் செய்துகொள்கிறார்கள். பங்களாதேஷில் இருக்கும் மண்டி என்ற பழங்குடி இன மக்களிடையே தான் இந்த கலாச்சாரம் இருக்கிறது.

இங்கிருக்கும் பெண்கள் தங்களை திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரன் ஏழு மலை தாண்டி வருவான் என்றெல்லாம் எதிர்ப்பார்ப்பதில்லை.

ஆரம்பித்த கதை :

ஏனென்றால் காலங்காலமாக அவர்களின் கலாச்சரப்படி தந்தையையே திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த கிராமத்தில் இருக்கும் பெண்மணி ஒருவர் கூறுகையில், தான் சிறுவயதாக இருந்தபோது தந்தை இறந்துவிட்டதாகவும், இதனையடுத்து தன்னுடைய தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டாராம்.

அன்றிலிருந்து இரண்டாம் அப்பாவை தன் கணவனாக ஏற்றுக் கொண்டாராம்.

இரண்டாவது திருமணம் : இங்கே இருக்கும் இன்னொரு விசித்திரமான கலாச்சாரம் என்ன தெரியுமா?

இள வயதில் கணவன் இறந்துவிட்டால், அந்தப் பெண் கணவரின் உறவினரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளலாம்.

20 லட்சம் பேர்! :

அந்தக் கணவன் தன்னுடைய மனைவி மனைவிமூலமாக பெற்ற குழந்தைகளையும், மகள் மூலமாக பெற்றக் குழந்தையை பராமரிக்க வேண்டும். பங்களாதேஷில் வசிக்கும் மண்டி இன மக்கள் சுமார் 20 லட்சம் பேர் வரை இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here