பொதுவாக ஆண்கள் அளவிற்கு பெண்களின் நட்பு நீடித்து இருப்பதில்லை என்று கூறப்படுவதுண்டு. பெரும்பாலும் எந்த பெண்ணை கேட்டாலும் பள்ளி காலத்து தோழியுடன் பல வருடங்களாக தொடர்பில் இல்லை என்று தான் கூறுவார்கள். ஆனால் ஆண்கள் நட்பு அப்படியில்லை. எல்.கேஜியில் உடன் படித்தவன் கூட தொடர்பில் இருப்பான்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படம் பெண்களை விழிப்புணர்வு செய்துள்ளதாக தெரிகிறது. பல பெண்கள் சமூக வலைத்தளங்களிலும் சில பெண்கள் நேரிலும் தங்கள் பள்ளி காலத்து தோழிகளை தேடுகின்றார்களாம். நிச்சயம் இதுவொரு விழிப்புணர்வுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிகா தனது முதல் ரீஎண்ட்ரி படமான ’36 வயதினிலே; படத்தில் மொட்டை மாடி விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த படத்தின் மூலம் பெண்களின் நட்பை உறுதி செய்துள்ளார். ஜோதிகா தேர்வு செய்யும் படங்கள் சமூக விழிப்புணர்ச்சியுடன் இருப்பதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here