இந்திய டெலிகாம் துறையுள் புதிய வருவாய் நுழைந்து, தனக்கென தனி சாம்பிராஜ்யத்தையே உருவாக்கி கொண்டுள்ள முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வைஃபை ரவுட்டர் ஆன ஜியோஃபை சாதனத்திற்கு “பண்டிகை கொண்டாட்ட” சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

11 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் இந்த பண்டிகை கொண்டாட்ட சலுகையின் கீழ், ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோஃபை சாதனத்தை வெறும் ரூ.999/-க்கு வாங்கலாம். இதன் அசல் விலை ரூ.1,999/- என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் 32 சாதனைகளுக்கு ஜியோஃபை சாதனத்தின் மூலமாக அதிக வேக 4ஜி தரவை வழங்க முடியும். மேலும் ஜியோஃபை சாதனம் அதன் பயனர்களுக்கு, எந்த செலவும் இல்லாமல் குரல் அழைப்பை செய்யவும் அனுமதிக்கிறது. ஜியோஃபை சாதனத்தின் இந்த கொண்டாட்ட வாய்ப்பை பெறும் முன்னர் நீங்கள் கவனிக்க வேண்டிய சில விடயங்களும் உள்ளது.

இந்த பண்டிகை கொண்டாட்ட சலுகையில் கீழ் ஜியோஃபை பி எம்2எஸ் மாதிரி மட்டுமே கிடைக்கும். இந்த ஜியோஃபை சாதனத்தை ஜியோ.காம் வலைத்தளத்திலிருந்து அல்லது ஜியோ கடைகள் போன்ற ஆஃப்லைன் சேனல்களிலிருந்தும் வாங்கலாம்.

நீங்கள் ஆன்லைனில் வாங்கினால் 3-5 வணிக நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும். ஆனால் சலுகை காலத்தில், இந்த வழக்கமான நேரத்தை விட அதிக காலம் எடுத்துக்கொள்ளலாம் என்று ஜியோ குறிப்பிட்டுள்ளது.

நீங்கள் இந்த சாதனம் வாங்கிய பிறகு ஒரு ஜியோ சிம்தனை பெற உங்கள் ஆதார் அட்டையுடன் அருகில் இருக்கும் ஜியோ ஸ்டோருக்கு வருகை தர வேண்டும் பின்னர் உங்கள் தேவைக்கேற்ப உரிய திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

உங்களின் எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் ஜியோ4ஜிவாய்ஸ் பயன்பாட்டை நிறுவி, உங்கள் ஜியோஃபை சாதனத்துடன் இணைக்க இலவச குரல் அழைப்பு நிகழ்த்தலாம். இந்த சாதனம் 5-6 மணி நேர இணைய உலாவல் ஆதரவு வழங்கும் 2300எம்ஏஎச் பேட்டரி கொண்டு வருகிறது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here