மலையாளப் பாடலான ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ISC கல்லூரி மாணவிகள் அதகளமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கேரளாவின் உச்சநட்சத்திரம் மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வெளிபாடிண்டே புஸ்தகம். இந்த படத்தை விட இதில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடல் கேரளாவின் தற்போதைய ட்ரண்ட்.

இந்நிலையில், ஓணம் பண்டிகை அன்று கேரளாவின் ISC கல்லூரி மாணவிகள் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஊற்சாகத்துடன் நடனம் ஆடும் வீடியோ தற்போது இணையத்தை வைரலகி அலங்கரித்துக்கொண்டிருக்கிறது..

குறிப்பாக இந்த பாடலில் முதல் வரிசையில் நடனமாடும் ஷெர்லிக்கு தமிழகத்தில் பெரிய இணைய ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது. இளமுறுவல் முகபாவனையுடன், எந்த மெனக்கெடலுமின்றி அமைந்துள்ள அவரின் நடனம், பிரேமம் படத்தின் மலர் டீச்சருக்கு அடுத்து தமிழகத்தில் பெரிய ரசிகர்களை அவருக்கு உருவாக்கிவிட்டது.

இதையடுத்து இளைஞர்கள் பலரும் அவரின் பேஸ்புக் ஐடியை தேடிக் கண்டுபிடித்து பாராட்டு மழையை பொழிந்துவிட்டனர்.</p><p>தமிழக இளைஞர்கள் பலரும் அப்பெண்களின் நடனத்தை புகழ்ந்து மீம்ஸ்களை உருவாக்கி அவர்களை கொண்டாடிவருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here