தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வது யார் என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் சூடாகி உள்ளது.

சினேகன், கணேஷ், ஹரிஷ், பிந்து, சுஜா, மற்றும் ஆரவ் என்று ஆறுபேர் தற்போது இருக்கும் நிலையில் இறுதிபோட்டிக்கு நான்கு பேர் தகுதி பெறுவர்.

 

அனேகமாக சுஜா மற்றும் ஹரிஷ் வரும் வாரங்களில் வெளியேற வாய்ப்பு உள்ளது, எனவே டைட்டிலை வெல்பவர் யார் என்ற போட்டியில் சினேகன், கணேஷ், ஆரவ், பிந்து, ஆகிய நான்கு பேர் மட்டுமே இருப்பார்கள். கோல்டன் டிக்கெட்டை சினேகன் பெற்றிருந்தாலும் அவரை டைட்டில் வின்னராக மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள போவதில்லை.

 

அதேபோல் ஹரீஷும் டைட்டில் வின்னருக்கு தகுதியான நபர் இல்லை. இந்த நிலையில் கணேஷ் அல்லது ஆரவ் அல்லது பிந்துவுக்கு இந்த டைட்டில் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், கணேஷூக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here