துப்பாக்கி, கத்தி படத்தை தொடர்ந்து, மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதற்கான பணிகளை இன்று முருகதாஸ் தொடங்கியுள்ளார்.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் செய்திகள் உலா வரும் நிலையில், விஜய்யின் அடுத்தப் பட வேலைகளை ஆரம்பித்து விட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.‘துப்பாக்கி’, ‘கத்தி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை இன்று தொடங்கியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.

முருகதாஸ் இயக்கத்தில் தற்போது ‘ஸ்பைடர்’ படம் உருவாகியுள்ளது. இதில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியாக இருக்கிறது. அதன்பின் விஜய் படத்தை இயக்க இருக்கிறார் முருகதாஸ்.

English summary:

After Mersal, Vijay to reunite with AR Murugadoss in Sun Pictures’ production
Vijay is currently shooting for his upcoming film Mersal with director Atlee. Murugadoss, meanwhile, is wrapping up his maiden project, Spyder, with Tollywood star Mahesh Babu. Vijay and Murugadoss will reunite for third time after Kaththi and Thuppaki.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here