விஜி சந்திரசேகர், தென்னிந்திய நடிகை ஆவார். திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்தளிலும் நடித்துள்ள இவர் நடிகை சரிதாவின் தங்கை.அழகிய தோற்றத்திற்கும், எதார்த்த நடிப்பாற்றலுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கிய சகோதரிகள் சரிதா மற்றும் விஜி. பாலசந்தரின் இயக்கத்தில்வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன்பின்னர் பல தமிழ் படங்களில் நடித்தாலும் 2012ல் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஆரோகணம் படத்தில் நடித்ததன் மூலம் பலரது பாராட்டினையும் பெற்றார்.

அதுமட்டுமல்லாது  மதயானைக்கூட்டம், நெருங்கிவா முத்தமிடாதே, வெற்றிவேல், முத்துராமலிங்கம், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம் போன்ற படங்களில் நடித்தார் விஜி. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

அதில் இரண்டாவது குழந்தைதான் லவ்லின் சந்திரசேகர். இவர் தற்போது மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் அனுபம் கெர்’ன் நடிப்பு கல்லூரியில் சேர்ந்து நடிக்க பழகி வருகிறார். மேலும், துபாயில் சென்று இது சம்மந்தமாக ஒரு டிகிரி முடித்துள்ளார்.

சந்திரசேகர் – விஜி தம்பதியின் மகளான லவ்லின், விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகியாக உருவாகவேண்டும் என்ற ஆசை மேலோங்க, குடும்பத்தினரின் அரவனைப்போடு கலையலகத்திற்கு அறிமுகமாகிறார் லவ்லின்.

லவ்லினின் புதிய படத்தின் படப்பிடிப்பு, அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது.இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் தெரிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

இவருடைய தற்போதைய புகைப்படங்கள் கிழே:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here