இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றிவிட்டது. இதனிடையே, ஒருநாள் போட்டியின் 4-வது ஆட்டம் நாளை கொழும்பில் நடைபெறுகிறது.

இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர் மற்றும் ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் உள்ள நிலையில், ஒருநாள் தொடரிலும் இலங்கையை ஒயிட் வாஷை செய்யும் நோக்கில் உள்ளது இந்தியா.இந்நிலையில், தோனி, நான்காவது போட்டியில் விளையாடுவதன் மூலம் 300 ஒருநாள் போட்டிகளை விளையாடிய தகுதியைப் பெறுவார். இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற தோனியும் ஒரு முக்கிய காரணமாக விளங்கினார். தன் மீதான விமர்சனங்களுக்கு தக்க பதிலடியாகவும் அவரது ஆட்டம் இருந்தது. மேலும், அந்த ஆட்டத்தில் பல வித சாதனைகளையும் அவர் புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

300-வது ஆட்டத்தை கடந்த இந்திய வீரர்களில், சச்சின் டெண்டுல்கர் (463) முதல் இடத்தில் உள்ளார். ராகுல் டிராவிட் (344), முகமது அசாருதீன் (334), சௌரவ் கங்குலி (311) மற்றும் யுவராஜ் சிங் (302) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

2004ம் ஆண்டு, வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான தோனி, 299 போட்டிகளில் இதுவரை 9608 ரன் குவித்துள்ளார். இதில், 10 சதம் மற்றும் 65 அரைசதமும் அடங்கும். கடந்த 2005ம் ஆண்டு, இலங்கைக்கு எதிராக 183 எடுத்த ரன் தான், ஒருநாள் போட்டியில் இவரது மிகப்பெரிய ஸ்கோராக உள்ளது. இந்த ஸ்கோர், தற்போது வரை எந்த ஒரு வீரராலும் முறியடிக்கப்படவில்லை.

ஒருநாள் போட்டியில் 4-வது மிகப்பெரிய ஸ்கோர் (9608) தோனியுடையது. டெண்டுல்கர் (18426), கங்குலி (11221), டிராவிட் (10768) முதல் மூன்று இடங்களில் உள்ளனர். ஒருநாள் ஆட்டங்களில், 200க்கும் அதிகமான சிக்ஸர்கள் அடுத்துள்ள வீரர்களில், தோனி (209 சிக்ஸர்) 4-வது இடத்தில் இருக்கிறார். ஷாஹித் அப்ரிடி 351, சனத் ஜெயசூர்யா 270 மற்றும் கிறிஸ் கெய்ல் 238 சிக்ஸர்கள் விளாசி முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

ஒருநாள் போட்டியில் சேஸிங்கின் போது, ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து வைப்பதில், தோனி அதிக வெற்றிகளை சந்தித்துள்ளார். மொத்தம் 40 இன்னிங்ஸில் அவர் வெற்றி கண்டுள்ளார். இந்த சாதனையையும் தற்போது வரை முறியடிக்கப்படவில்லை. இதனால் தான் அவர் ‘சிறந்த ஃபினிஷர்’ என்று போற்றப்பட்டு வருகிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here