ஐபிஎல் ஏலத்தின் ஒரு பகுதி நேற்று நடந்து முடிந்தது .அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் இறுதி முடிவில் தீயாய் வேலை செய்து கொண்டிருகின்றன. அணிகள் அனைத்தும் குறைந்த பட்ச வீரர்களை எடுத்துள்ளது மீதம் உள்ள இளம் வீரர்களை இன்று எடுக்க அணிகள்  ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கபடுகிறது.

சென்னை அணி ரசிகர்கள் இந்த ஆண்டு மிகச்சிறந்த வீரர்களை எடுப்பார்கள் என எதிர் பார்த்த நிலையில் தேடி தேடி வயதான வீரர்களை எடுத்து வந்தது அனைவருக்கும் ஆச்சர்யம் அளித்தது . இது ரசிகர்ளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலர் இது குறித்து சாதகமாகவும் பேசியுள்ளனர்.   இனைய மற்றும் சமூக வலை தளங்களில் இது குறித்து கேலியும் கிண்டல்களும் அதிகரித்தது.

வயது

சென்னை அணி வீரர்களில் பாதி பேர் 30 வயதினை தாண்டியவர்கள் . சென்னை எடுத்த இம்ரான் தாஹிர், அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், பிராவோ, பிளசிஸ், ஹர்பஜன் சிங் ஆகிய அனைவரும் மிகவும் வயதானவர்கள். டோணியையும் சேர்த்து எல்லோரும் 30 பிளஸ் வயது உடையவர்கள்.

இதனால் நாளை எடுக்க போகும் வீரர்களுக்கும் இதே நிலமை தானா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

வயது குறைந்த வீரர்கள் 

சென்னை அணி எடுத்த அனுபவ வீரர்களில் 30 வயதுக்கும் குறைந்தவர்களும் இருக்கிறார்கள். இதில் ஜடேஜா மட்டுமே 29 வயது உள்ளவர், அதேபோல் கரன் சர்மா 30க்கும் குறைவானவர். இன்னும் சிலர் நாளை எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் முன்னணி  வீரர்களும் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதனால் இன்றைய ஏலம் சென்னை அணிக்கு சாதகமாக இருக்கும் .  இன்று நிறைய திறமையான வீரர்களை சென்னை அணி மீண்டும் எடுக்கும் என உறுதியாக நம்பலாம்.

பிரச்சனை

இப்பொழுது எழுந்திருக்கும் சர்ச்சை என்னவென்றால் இந்த வீரர்கள் இப்போது எப்படி வேண்டுமானாலும் ஆடலாம். ஆனாலும் இன்னும் 3 வருடத்திற்கு இது போன்ற பெரிய ஏலம் விடும் நிகழ்வு நடக்காது. எனவே மூன்று வருடத்திற்கு பின் சென்னை அணி எப்படி இருக்கும் என்று இவர் கவலை கொண்டு இருக்கிறார்.

ஏனெனில் ஒரு சில வீரர்கள் காயம் காரணமாக  கூட விலக நேரிடலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால் அணியும் தனது வீரர்களின் மீது கவனம் செலுத்துவது நல்லது .

மாஸ்டர் பிளான்!

தோனியின்  யுக்தி எப்பொழுதும் வித்யாசமாக தான் இருக்கும். ஆரம்பத்தில் நமக்கு தவறுதலாக பட்டாலும் இப்படி பட்ட சூழ்நிலைகளை அவர் கையாளும் விதமே வேறு . இரண்டு வருடம் முன்பு நெஹ்ரா அணியில் இடம் கிடைக்காமல் இருந்த போது சென்னை அணியால் எடுக்கப்பட்டார். அதன்பின்புதான் அவர் பார்மிற்கு வந்தார். அதேபோல் இவர்களும் சென்னை அணியில் கலக்குவார்கள் என ரசிகர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

சென்னை அணியானது அனுபவம் மிக்க வீரர்களை எடுக்க முழு காரணம் இதுவாக கூட இருக்கலாம்  அடுத்த வருடம் நடக்கும் உலக கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வாக கூட இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.

நெட்டிசன்கள் கிண்டலடித்து  போட்ட மீம்ஸ் தொகுப்புகள் கிழே:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here