‘ஹரஹர மஹாதேவகி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் கெளதம் கார்த்திக் – இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் கூட்டணி அமைத்துள்ள படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இதில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், முக்கிய வேடங்களில் சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன், கருணாகரன், சாரா, பாலசரவணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

பாலமுரளி பாலு இசையமைத்து வரும் இதற்கு பல்லு ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘BLUE GHOST’ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ‘பார்ட்டி சாங் – மொக்க லவ் சாங்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் துவங்கப்பட்ட டப்பிங் பணி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட்டுள்ளனர். இந்த டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here