அமெரிக்கவையே அதிர வைக்கும் அளவுக்கு முன்னாள் ஐக்கிய அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் மிச்சிகன் மாநில பல்கலைக்கழக டாக்டர் நடத்திய காம வேட்டை ஆடியது அமெரிக்காவையே அதிரவைத்துள்ளது. தனது காம வெறியால் கடக்கில் அடங்காத பெண்களின் கர்ப்பை சூறையாடிய டாக்டருக்கு எதிராக 156 பெண்கள் சாட்சியளித்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

முன்னாள் ஐக்கிய அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் மிச்சிகன் மாநில பல்கலைக்கழக டாக்டர் லாரி நாசர் சிகிச்சை என்ற பெயரில் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் மருத்துவர் லாரிக்கு எதிராக 156 பெண்கள் சாட்சியம் அளித்தது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கைல் ஸ்டீபன் என்ற பெண் 6 வயது சிறுமியாக இருந்தபோது அவரிடம் தவறாக நடந்துள்ளார் மருத்துவர் லாரி. லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க அணியில் முக்கிய வீராங்கனையாக இருந்த மரோனே 15 வயதாக இருக்கும் போது அவருக்கு தூக்க மாத்திரை அளித்து கற்பழித்துள்ளார் இந்த லாரி நாசர்.

ஒலிம்பிக் வீரங்கனை வைபர் மருத்துவர் லாரி நாசரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதேபோல, 156 பெண்கள் மிகவும் ஆழமாகவும், அழுத்தமாகவும் மருத்துவர் லாரி நாசருக்கு எதிராக தங்கள் சாட்சியை நீதிபதி ரோஸ்மாரி முன்னிலையில் பதிவு செய்தனர்.

உனக்கு 175 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கிறேன். இனி நீ சிறைக்கு வெளியே வரக் கூடாது. நீ சிறைக்கு வெளியே வாழத் தகுதியற்றவன். நான் உன் மரணத்துக்கு கையெழுத்திடுகிறேன் என கூறி தீர்ப்பு நகலில் அதிரடியாக கையெழுத்திட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here