தமிழ் சினிமாவில் தல அஜித் இன்று முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவருடன் நடிக்கும் அனைவருமே கிடுகிடுவென பிரபலமாகி விடுவார்கள்.தல அஜித் பெயரை வைத்து இந்த தமிழ் சினிமாவில் உயரம் என்றவர்கள் பலர் உள்ளனர்.அதுபோல தற்போது ஒரு நடிகர் வந்துள்ளார். தல அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் கிரீடம்.இதில் தல அஜித்திற்கு தம்பியாக நடித்திருந்தவர் வினோத் கிஷான்.இவர் மேலும் நடிகர் சூர்யா நடித்த நந்தா திரைப்படத்தில் இளம் வயது சூர்யாவாக நடித்திருப்பார்.

மேலும் கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தில் வில்லனாக மிரட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.தனது வித்தியாசமான நடிப்பின் மூலமாக நான் மகான் அல்ல திரைப்படம் வெளிவந்த போது நிறைய பேரின் கவனத்தை ஈர்த்தார்.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார் வினோத். இவர் விரைவில் தமிழில் உருவாக உள்ள ஒரு படத்தில் நாயகனாக நடிக்க உள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here