ஆண்களுக்கு நிகராக பெண்களும் இந்த காலத்தில் அணைத்து துறைகளிலும் முன்னேற தொடங்க்கி விட்டனர். என்னதான் பேச்சில் அவர்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று கூறினாலும் இன்னும் பெண்களுக்கு எதிராக வன் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வேலைக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த மாதிரியான கொடுமைகள் நடக்கிறது -வீடியோவை பாருங்க ..இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .கிழே வீடியோ கொடுக்க பட்டுள்ளது கிளிக் செய்து பாருங்கள்.

மேலும் இதையும் படியுங்கள் வீடியோவிற்கு பின் :தயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து?.. படிங்க கண்கலங்கிடுவீங்க

தயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து?.. படிங்க கண்கலங்கிடுவீங்க

மருந்துக்கடைக்கு தயங்கிய படியே நெருங்கினாள் 8 வயது சிறுமி ஒருவள். கடைக்காரரோ வேறு ஒருவருடன் மிகவும் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்.குறித்த குழந்தை கடை அருகே வந்து அங்கிள்… அங்கிள்… என்றது. அதற்கு அவர் என்னம்மா? என்று பரிவுடன் கேட்டார்.எனது அண்ணனுக்கு உடம்பு சரியில்லை. மருந்து வேண்டும்… என்று கண்களில் கண்ணீருடன் கேட்டாள்.

அதற்கு கடைக்காரர் Prescription (மருந்துசீட்டு) கொண்டு வந்தாயா?.. என்று கேட்டார். சிறுமி புரியாமல் தவித்த நிலையில்… என்னிடம் காசு உள்ளது என்று தனது மண் உண்டியலை எடுத்து மேசையில் வைத்தது. இந்த காசு போதவில்லை என்றால் மறுபடியும் வீட்டிற்கு சென்று எடுத்து வருகிறேன்.

ஆனால் எனக்கு அந்த மருந்து மட்டும் தாங்க அங்கிள் என்று அழுக தொடங்கியுள்ளது. கடைக்காரர் சரிமா அழாதே என்று மருந்து பெயரை கூறச் சொன்னார்.

அக்குழந்தை மென்று விழுங்கி “மெரிக்கள்” என்று கூறியது. புரியாத கடைக்காரர் மீண்டும் மீண்டும் சிறுமியிடம் கேட்டார்.

மறுபடியும் ”மெரிக்கள்” என்று கூறினார் சிறுமி. உடனே அப்படியொரு மருந்தே இல்லையென்று கூறிய கடைக்காரர் இந்த மருந்து பெயரை யார் கூறியது என்று கேட்டார்.

குழந்தை கண்ணீருடன் கூறியது… டாக்டர் அம்மா அப்பா இருவரிடம் பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன். இந்த மருந்து இருந்தால் மட்டுமே அண்ணன் பிழைக்க முடியுமாம் அங்கிள்.. என்று மறுபடியும் அழத்தொடங்கியது.இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மருந்துக்கடைக்காரரின் நண்பர், அழுகாதே பாப்பா… நான் மருந்து வாங்கித் தருகிறேன்… அதற்கு முன்பு உங்க வீட்டிற்கு சென்று அண்ணணை பார்த்துவிட்டு வரலாம் என்றார். குழந்தை அவரின் கையை பிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றது.

வீட்டில் அவளது அண்ணனை பரிசோதித்த அவர், பெற்றோரிடம் விபரத்தை கேட்டு தெரிந்து கொண்டு அந்த நோயாளி அண்ணனுடன் மருத்துவமனைக்குச் சென்று, அவனுக்கு சிகிச்சை செய்த மருத்துவரின் அனைத்து விபரத்தினையும் கேட்டு அறிந்துள்ளார்.அந்த சிறுவனுக்கு இதயத்தில் 5 இடங்களில் பிளாக் இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் மேல் செலவாகும் என்று மருத்துவர் கூறினார். அதற்கு அந்த நண்பர்.. டாக்டர் நானும் ஒரு டாக்டர் தான்.

இருதய சிகிச்சை நிபுணர் என்றும் அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வேலை செய்வதாகவும், விடுமுறைக்கு இங்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் இந்த சிறுவனுக்கு அறுவைசிகிச்சை உங்கள் உதவியுடன் நான் செய்யலாமா?.. மருத்துவ செலவு முழுவதையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

அறுவைசிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது. பெற்றவர்கள் கண்ணீர் மல்க கடவுகள் தான் உங்க ரூபத்தில் வந்து காப்பாற்றியதாக கூற, அதற்கு அந்த மருத்துவர் இதற்கு மூல காரணமே உங்கள் பெண் குழந்தையின் அன்பு தான் என்றார்.

காரணம் டாக்டர் உங்களிடம் ஏதாவது Miracle நடந்தால் தான் உண்டு என்று கூறியதை கேட்ட குழந்தை, அது மருந்து தான் என்று நினைத்து என் நண்பரின் மருந்து கடைக்கு வந்தது தான் என்றார்.யார் யாருக்கு எந்தெந்த நேரத்தில் என்ன தேவை என்பது இறைவனுக்கு நிச்சயம் தெரியும்… இப்பொழுது அதனை அந்த குழந்தையின் மூலமாக கொடுத்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here