ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது.முன்னதாக, ஏப்ரலில் இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2.0 படத்தின் விஷீவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இன்னும் நிறைவு பெறாததால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது. படம் முழுமையாக முடிவைடய இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

2.0 படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் ஹாலிவுட்டின் பிரபல ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைகா நிறுவனம் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்து வருகிறது.

காலா இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவாதகவும் விரைவில் சென்சாருக்கு அனுப்பப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, இத்திரைப்படம் ஆகஸ்ட் வெளியீடு எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த படம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதை படத்தின் தயாரிப்ப்பாளர் தனுஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here