தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் அந்த காலம் முதல் இந்த காலம் வரை குறைந்த அளவே வந்து செல்வர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்க கூடியவர்கள் .

2014ஆம் ஆண்டு வருடம் தல அஜித் நபிக்க சிறுத்தை சிவா இயக்கிய படம் வீரம். இந்த படம் அப்போது பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. படத்தில் கயல்விழி என்ற பெயரில் ஒரு சின்ன குழந்தை நடித்திருக்கும். அந்த குழந்தை யார் தெரியுமா? குழந்தையின் உண்மையான பெயர் தெரியுமா?

இந்த குழந்தையின்  உண்மையான பெயர் யுவினா. இவர் 2008 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர்  . இவருடைய அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது தந்தைக்கு தனது குழந்தையை சினிமாவில் நடிக்க வைத்தே ஆகவேண்டும் என்ற ஆசையாம் அதே போலவே இந்த குழந்தையும் நடிப்பில் பின்னினார் . 2013ஆம் ஆண்டு உறவுக்கு கை கொடுப்போம் என்ற ஒரு சீரியலில் நடித்தார் யுவினா. அதன் பின்னர் படங்களில் நடிப்பதற்கென சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார் அவரது அப்பா.

அதன் பின்னர்தான் பல பட வாய்ப்புகள் கிடைத்து , வீரம், மஞ்சப்பை, கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடித்த ஸ்ட்ராபெரி என்னும் தமிழ் படத்தில் மிக முக்கியமான ரோலில் நடித்தார்.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கிட்டதட்ட நடித்து கொண்டிருக்கிறார், தற்போது மம்மி என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார் யுவினா.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here