சிவா இயக்கத்தில் தல அஜித் விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. சிவா – அஜித் கூட்டணியில் வந்த வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்கள் அனைத்து வி என்ற எழுத்தில் தொடங்கப்பட்டு ம் என்ற எழுத்தில் முடிவடைந்துள்ளது. தற்போதும், 4வது முறையாக வி என்ற எழுத்தில் தொடங்கி ம் என்ற எழுத்தில் முடியும் பட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிக்க உள்ளதாகவும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன, ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த படத்தில் முக்கிய ரோலில் விஜய் யேசுதாஸ் நடிக்க உள்ளதாக அவர் மலையாள பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார், இதனையடுத்து தற்போது எடிட்டர் ரூபன் விஸ்வாசம் படத்திலும் நான் தான் எடிட்டராக பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பூஜை மிக எளிமையான முறையில் நடந்துள்ளது. தொடர்ந்து சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் வலம வந்த தல, இந்தப் படத்தில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. வேதாளம் படத்தில் வரும் எடுத்துக்காட்டு காட்சி போன்று, வட சென்னையை பிரதிபலிக்கும் ஒரு படமாக, இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here