சிவா இயக்கத்தில் தல அஜித் விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. சிவா – அஜித் கூட்டணியில் வந்த வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்கள் அனைத்து வி என்ற எழுத்தில் தொடங்கப்பட்டு ம் என்ற எழுத்தில் முடிவடைந்துள்ளது. தற்போதும், 4வது முறையாக வி என்ற எழுத்தில் தொடங்கி ம் என்ற எழுத்தில் முடியும் பட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பூஜை மிக எளிமையான முறையில் நடந்துள்ளது. தொடர்ந்து சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் வலம் வந்த தல, இந்தப் படத்தில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக வதந்திகள் வந்தன.ஆனால் தற்போது அதற்கு முற்றுப்புள்ளியாக நடிகை நயன்தாரா அஜித்திற்கு ஜோடியாக நடிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன்னரே நடிகர் அஜித் நயன்தாராவுடன் ஆரம்பம்,பில்லா,ஏகன் ஆகிய படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்காக நயன்தாராவிற்கு சம்பளமாக ரூ 5 கோடி பேசப்பட்டு இருப்பதாக செய்திகள் கசியத் தொடங்கியுள்ளது.மேலும் கோலிவுட் நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா தான், வேலைக்காரன் படத்திற்கும் அப்படி தான் சம்பளம் கொடுக்கப்பட்டது என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here