என்ன செல்லம் நீ’ என கொஞ்சலாகக் கூறினாலே, போதும் உடனடியாக நமது மனக் கண்ணில் வந்து விடுவார் நடிகர் பிரகாஷ்ராஜ். அந்தளவுக்கு ‘செல்லம்’ என்ற வார்த்தையால் பிரபலமானவர் அவர்.

கில்லி படத்தில் த்ரிஷாவை அவர் செல்லமாக ‘செல்லம்..செல்லம்’ என அழைக்கும் போதெல்லாம், அவர் அப்படத்தின் வில்லன் என்பதையும் மறந்து ரசிகர்கள், பிரகாஷ்ராஜை ரசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இது போன்ற பாக்கியம் சில வில்லன் நடிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அந்த வகையில் செல்லம் என்ற வார்த்தை மூலம் பிரபலமான பிரகாஷ்ராஜ் அவர்கள் இப்பொழுது சமூக கருத்துகளையும் பேச ஆரம்பித்து விட்டார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரை சேர்ந்தவர். இவர் தமிழ் மட்டுமல்லாது அனைத்து இந்திய  த தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என  அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.

இவருக்கு முதலில் 1994ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு இடையிலான திருமண வாழ்வு அழகாக நகர்ந்தது.  இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.கடந்த 2009ஆம் ஆண்டு லலிதா குமாரியிடம் இருந்து விவாகரத்து பெற்றார் பிரகாஷ் ராஜ்.

பின்னர் வெகு நாட்கள் தனியாக வாழ்ந்த பிரகாஷ்ராஜ் மீண்டும் காதலில் விழுந்தார். ர் 2010ஆம் ஆண்டு போனி வர்மா என்னும் பாலிவுட் நடன இயக்குனரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.

இதுவரை தனது இரண்டாவது மனைவியின் குழந்தை மற்றும் குடும்பத்தின்  புகைப்படங்களை வெளியிட்ட அவர் முதல் மனைவியின் குழந்தை மற்றும் குடும்ப்பத்தின் புகைப்படங்களை வெளியிடவில்லை.

சமீபத்தில் நடந்த ஒரு டீவி நிகழ்ச்சியில் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜ் தற்போது 52 வயதிலும்  நல்ல படங்களை தேர்வு செய்து நடிப்பது   குறிப்பிடத்தக்கது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here