விண்ணைத்தாண்டி வருவாயா 2010ம் ஆண்டில் வெளிவந்த காதல்  திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். சிலம்பரசன்,த்ரிஷா மற்றும் கணேஷ் ஜனார்தனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2009ம் ஆண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் பிப்ரவரி 26, 2010 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

இத்திரைப்படத்தினை கௌதம் மேனனின் நண்பர்களான மதன், கணேஷ் ஜனார்தனன், எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் அவர்கள் தயாரிக்க, ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தினை முதலில் யாரும் ரசிக்க வில்லை என்றாலும் காலபோக்கில் இந்த படம் காதல் காவியம் அளவிற்கு பேசப்பட்டது. அந்த அளவிற்கு இந்த படம் இளசுகளுக்கு பிடித்து போனது, இன்றுவரை இந்த படத்தினை திரையில்  வெளியிட்டால் பார்க்கும் கூட்டமும் இருக்கிறது.

பொதுவான நிஜ வாழ்க்கையில் நடக்கும் காதலின் நிலை குறித்து அழகாக கூறி இருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இந்த படத்தினை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குகிறார்.

ஆனால் இந்த படத்தில் 4 ஹீரோக்கள் நடிக்க உள்ளனர். முதல் பாகத்தில் சிம்பு தவறவிட்ட தன் காதலி ஜெஸ்சியை, மீண்டும் 7 ஆண்டுகள் கழித்து தேடிச்சென்று சந்திப்பது தான் கதை. இந்த கேரக்டரில் முதலில் சிம்பு நடிக்க இருந்தார். ஆனால் தற்போது சிம்புவிற்கு பதில் ‘கார்த்திக்’ கேரக்டரில் மாதவன் நடிக்க உள்ளார். இந்த செய்தியை மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் இதனை கொண்டடி வருகின்றனர். நீண்ட வருடத்திற்கு பிறகு மாதவனும் கெளதம் வாசுதேவ் மேனனும் சேர்வது மிகுந்த எதிர்பார்ப்பை அளித்துள்ளது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here