இணையத்தளத்தில் ஹாட் சென்சேஷனாக பேசப்பட்டு வரும்  பிரியா பிரகாஷின் மலையாள திரைப்படமான  ’ஒரு அடார் லவ்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.மலையாள இயக்குனர்  ஓமர் லுலு தற்போது பள்ளி பருவ காதலை முன்வைத்து  ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ’மாணிக்ய மலராய பூவி’ என்ற சிங்கிள் சாங் வெளியாகி இணையத்தில் வைரலானது. பாடலின் மெட்டை விட,  அந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியர், இளைஞர்கள் இணைய வைரல் அழகியானர்.

குறிப்பாக அவரின் ரியாக்‌ஷன்கள் மட்டும்  ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பல வெர்ஷனில் ஸ்டேட்சாக மாறியது.  அதே சமயம், இந்த வீடியோவை கலாய்த்து ஒரு பக்க மீம்ஸ்களும் வந்துக் கொண்டிருக்கிறது.

ஒரே வீடியோவில் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தில் வரும் பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய எக்ஸ்பிரஷன் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க ஆசை என கேட்டதற்க்கு, “இப்போது உள்ளவர்களில் துல்கர் சல்மானோடு நடிக்கவேண்டும் என்பதே என் கனவு” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here