லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குனர் என பல துறைகளில் கலக்கி வருபவர். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் இவர் தொகுப்பாளராக இருக்க, பல குடும்பங்களில் நடக்கும் பிரச்னைகளை விவாதமாக எடுத்து பேசுவார். ஆனால் பலருக்கும் இவரை பற்றியும் இவரது குடும்பத்தை பற்றியும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

லட்சுமி ராமகிருஷ்ணன் 1970ஆம் ஆண்டு கேரளாவின் பாலகாட்டில் பிறந்தவர். இவருடைய அப்பா கிருஷ்ணசாமி இந்தியாவின் மிகப்பெரிய நூல் வியாபாரி. லட்சுமிக்கு அவரது 15 வயதில் ராமக்கிருஷ்ணனுடன் திருமணம் செய்து வைத்தார் அவரது அப்பா கிருஷ்ணசாமி.

இதனால் தன்னுடைய சுதந்திரத்தை இழந்து தன கணவருடன் செல்ல வேண்டியதாயிற்று இவரது கணவரும் IITயில் படித்து நல்ல வேளையில் இருந்தார் அப்போது . இதனால் தனது 15 வயதில் இருந்து 35 வயது வரை ஓமன் நாட்டில் தன் கணவருருடன் வாழ்ந்து வந்தார் லட்சமி.

இவருக்கு பின்னர் அழகாக மூன்று பெண் குழந்தைகள் பிறந்தது . பல ஆண்டுகள் ஓமன் நாட்டில் இருந்த பின்னர் தனது தாய் நாடான இந்தியா வந்தார் லட்சுமி. அதன்பின்னர் தனது மூன்று குழந்தைகளின் கல்விக்காக கனவருடன் கோயமுத்தூர் வந்து செட்டில் ஆனார் லட்சுமி.

இப்போது அவரை ஒரு சமூக போராளியாக நமக்கு தெரியும் ஆனால் அவர் ஓமன் நாட்டில் இருந்த பொழுதே பெண்கள் நலனுக்காக உழைத்தவர்.அங்குள்ள பெண்களின் திறமையை வளர்க்க ஒரு பவுண்டேசனை துவங்கி அவர்களுக்கு திறமையை வளர்க்கும் பல பயிற்சிகளை கொடுத்து வந்தார். இதனால் ஓமன் நாட்டின் விருதினையும் பெற்றுள்ளார் லட்சுமி.

மலையாள படம் ஒன்றிற்காக தனது வீட்டை ஒரு படக்குழு வாடகைக்கு கேட்பதை அறிந்த அவர் தானும் அந்த படத்தில் நடிக்க வேண்டுமென கேட்டுகொண்டதற்க்காக இந்த படத்தில் அறிமுகமானார். 2005ல் இருந்து 6 ஷார்ட் பிலிம்களை இயக்கினார்.

பின்னர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு யுத்தம் செய் என்ற படத்திலும் நடித்தார். அதன்பின்னர், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி என மூன்று படங்களை இயக்கினார். மேலும், பொய் சொல்லப்போறோம், எல்லாம் அவன் செயல், ஈரம், நாடோடிகள், வேட்டைக்காரன், விண்ணைத்தாண்டி வருவாயா, ஆண்மை தவரேல், ராவணன், நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன், யுத்தம் செய், ரௌத்திரம், லீலை, சென்னையில் ஒரு நாள், என பல தமிழ் படங்களில் நடித்தார்.

சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் இவர் இன்றுவரை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாக விமர்சிக்கபட்ட மனிதர் ஆனார் லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும் இந்த ஷோ’வை மையமாக வைத்து கலாய்க்கும் பல ஷோ’க்கள் வந்தது. என்னதான் களாய்த்தாலும் அந்த ஷோ’வை தற்போது வரை நடத்தி வருகிறார் லட்சுமி.

மேலும் தனது சொந்த தயாரிப்பில் பல படங்களை எடுக்க திட்டமிட்டு வருகிறார். தற்போது ஒரு தமிழ் படத்தை இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here