இயக்குநர் , திரைக்கதை அமைப்பாளர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் ராம் கோபால் வர்மா. இவர் ‘சத்யா’, ‘ரத்த சரித்ரா’, ‘2008 மும்பை அட்டாக்’, ‘தி அட்டாக்’, ‘கிருஷ்ண வம்சி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார், ஏராளமான படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் பிரமரானால் என்னவாகும் என்று இயக்குர் ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களைக் கூறுவதும், பின்னர் அதற்கு மன்னிப்பும் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கோருவார்.சமீபத்தில் மகளிர் தினத்தில் வாழ்த்துச் செய்தி தெரிவித்து, ராம்கோபால் சர்ச்சையில் சிக்கினார், அதன்பின் மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, அதை பின்வாங்கி, மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”உலகில் உள்ள 200 நாடுகளில் இந்தியாவின் நிலையை எடுத்துக்கொள்வோம், ரஜினிகாந்த் நம் நாட்டுக்கு பிரதமராக வந்தால், இந்தியா அமெரிக்காவாக மாறும். இது எப்படி மாறும் என்றால் அவரின் 2. ஜூரோ திரைப்படம், 200.ஜூரோ அளவுக்கு உயரும்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here