தமிழ் சினிமாவில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசைக்கு பிறகு ரசிகர்கள் அனைவராலும் அதிகம் ரசிக்கப்படும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.இவரது பாடல்கள் சமீப காலமாக சரியான முன்னேற்றம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது சிறப்பான பாடல்களை கொடுத்து வருகிறார்.தற்போது இவர் இசையில் வெளியான ப்யார் பிரேமா காதல் திரைப்படத்தின் சிங்கள் பாடல் வைரலாக பரவுகிறது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது காதலியான லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவை கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2008-ஆம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

அதற்கு பிறகு, ஷில்பா மோகன் என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் யுவன். ஷில்பாவுடனும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து யுவனை விட்டு ஷில்பா பிரிந்து சென்றுவிட்டார்.இவர் சில வருடங்களுக்கு முன்பு இந்து மதத்தில் இருந்து முஸ்லிமாக மாறினார்.

பின்னர் முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. இதுவரை குடும்ப பெண்ணாக இருந்து வந்த யுவனின் மனைவி தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் – ரைசா இணைந்து நடிக்கும் பியர் பிரேம காதல் என்ற படத்தில் ரைசாவிற்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வருகிறாராம். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here