தமிழ் திரைப்பட ரசிகர்களால் ஆச்சி என அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், அவர் மட்டுமே. தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது தான். அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இவ்வளவு சாதனைகளைப் படைத்த ஆச்சி மனோரமாவின் திருமண வாழ்க்கை பற்றி பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..மனோரமா நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது சக நடிகராக அறிமுகமான ராமநாதன் நாடகத்தில் அதிக செல்வாக்கோடு இருந்ததால், அவர் மனோரமாவுக்கு சில நாடக வாய்ப்புகளை வாங்கிக்கொடுத்துள்ளார்.

தாயுடன் வசித்து வந்த மனோரமா ராமநாதனின் ஆதரவிலும் அன்பிலும் மயங்கி அவர் மீது காதலில் விழுந்துள்ளார்.இது தெரிந்த மனோரமாவின் தாய், ராமநாதன் வேறு குலம் என்பதால், அவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்க மனோரமாவோ தனது தாயை மீறி ராமநாதனை திருமணம்செய்துக் கொண்டுள்ளார்.

திருமணம்செய்து கொண்ட அவர்கள் இருவரும் 10 மாதங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்கள்.

ஏனெனில் ராமநாதன் தனது நண்பர்களிடம் மனோரமாவை மடக்கி காட்டுகிறேன் என்று சவால்விட்டு, அந்த சவாலை நிறைவேற்ற காதலிப்பதாக நடித்து திருமணம் செய்துக் கொண்ட திட்டம் மனோரமாவிற்கு தெரிய வரவே கர்ப்பமாக இருந்த மனோரமா மிகவும் அதிர்ச்சியாகியுள்ளார்.

மேலும், மனோரமாவிற்கு பிறந்த குழந்தையால் ராமநாதனின் உயிருக்கு ஆபத்து என்று ஒரு ஜோதிடன் கூறியதைக் கேட்ட ராமநாதன்அந்தக் குழந்தையை கொல்வதற்கு முயற்சி செய்ய இதனால் ஆத்திரமடைந்த மனோரமா தனது குழந்தையின் உயிரை காப்பாற்ற நிரந்தரமாக ராமநாதனை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

அதன் பிறகு நாடகம், சினிமா என்று வளர்ச்சி அடைந்த மனோரமா பல்வேறு உயரங்களை எட்டினார்.மனோரமா சின்னத்தம்பி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவரின் கணவர் ராமநாதன் இறந்துவிட்டார்.

பின் மனோரமா தனது மகனான பூபதியை அழைத்துக் கொண்டு சென்று இறுதிச் சடங்கை முடித்து விட்டு வந்தார்கள்.சமூகவழக்கப்படி, மனோரமாவை பூவும் பொட்டும் இல்லாமல் வாழ சமூகத்தவர்கள் வலியுறுத்திய போது அவர் மறுத்து விட்டார்.ஏனெனில் அவர் மகனான பூபதி தன் கடமையை செய்தான், ஆனால் ராமநாதன் என்னை விட்டு எப்போது சென்றாரோ அப்பொழுதே என் கணவர் இறந்துவிட்டார் என்று கூறினாராம்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here