மோட்டார் வாகன சட்டப்படி, அசல் ஆவணங்கள் வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. ஒரிஜினல் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? என்று நாம் அனைத்து ஆவணங்களின் நகலைத்தான் இதுவரை உடன் வைத்திருந்தோம். இனிமேல் போக்குவரத்து காவல்துறையினர் இதை அனுமதிக்க மாட்டார்கள். இது நல்லதுக்குத்தான் என்றாலும், நடைமுறை சிக்கல்களை பொதுமக்களாகிய நாம்தான் அனுபவிக்கப் போகிறோம்.தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?ஒரு வாகன ஓட்டுனர், தனது ஒரிஜினல் ஓட்டுநர் லைசென்சை தொலைத்து விட்டால், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்க வேண்டுமாம். ஒரு வாரம் கழித்து மீண்டும் அவர்களை போய் பார்த்து, ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என, சான்றிதழ் ஒன்று அவர்களிடமிருந்து வாங்கி வர வேண்டுமாம். அந்த சான்றிதழை, அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த, வட்டார போக்குவரத்து அலுவலர் (Regional Transport Officer) அவர்களிடம் கொடுக்க வேண்டுமாம். அவர் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும், அந்த நபரின் டிரைவிங் லைசென்ஸ் எண்ணை அனுப்பி, ‘இவரது லைசென்சை, யாராவது ஏதாவது குற்றத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்து உள்ளீர்களா?’ என கேட்டு, கடிதம் எழுதுவாராம்.அதற்கு, பதில் வராத பட்சத்தில், எல்.எல்.டி., படிவம் மற்றும் 20ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தில், ‘தற்போது, நான் வாங்கும் லைசென்சை தவறாக பயன்படுத்த மாட்டேன். இதில், நடக்கும் தவறுக்கு நானே பொறுப்பு’ என்று நாம் எழுதி கொடுக்க வேண்டுமாம். பின்,10 நாட்களில், புதிய டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here