நடிகர் விமல் இப்போது தமிழில் முன்னணி நடிகர் ஆவார் . விஜய் நடித்துள்ள கில்லி மற்றும் குருவி மற்றும் அஜித் குமாரின் கிரீடத்திலும் நடித்தார். தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்பட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டர். பின்னர், இவர் பல குறைந்த நிதிநிலை (budget) தயாரிப்பில் உருவாகும் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவற்றில் இவர் புகழ்பெறவில்லை என்றாலும், இவர் இதைத்தொடர்ந்து சசிகுமார் தயாரித்து, பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இத் திரைப்படத்தில் இவருடைய கதாப்பாத்திரத்தின் பெயர் மீனாட்சி சுந்தரம் ஆகும். இப்படத்தில் இவர் கைபேசியில்”இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு யாரு?”என்று இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம் ஆனது.

இதைத் தொடர்ந்து களவாணி படமும் மிகப் பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. இதன் பின் தொடர்ச்சியாக தூங்கா நகரம், எத்தன், மற்றும் வாகை சூட வா படங்களில் நடித்தார்.

இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு தனது பால்ய கால தோழி அக்சயா உடன் திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இந்த திருமணம் ஒரு பெரிய ரன்னிங்-சேஸிங் திருமணம் ஆகும்.

இவர் விமலின் குழந்தை பருவ நம்பர். சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார் ஆக்சயா.அப்போது அடிக்கடி அக்சயாவை பார்க்க அவரது கல்லூரிக்கு செல்வார் விமல். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது.

இதனை பார்த்த அக்சயாவின் பெற்றோர்.எனது மகள் ஒரு டாக்டர். அவளுக்கு ஒரு டாக்டரைதான் திருமணம் செய்து வைப்போம் என அக்சயாவிற்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கியுள்ளனர். மேலும், ஒரு நடிகருக்கு எங்கள் பெண்ணை தரமட்டோம் எனவும் கூறியுள்ளனர்.

அப்போது கும்பகோணத்தில் ‘எத்தன்’ பட சூட்டிங்கில் இருந்தார் விமல். தனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என தெரிந்ததும் இரவோடு இரவாக இரயில் ஏறி கும்பகோணம் வந்துவிட்டார் அக்சயா. அங்கு ஒரு முருகன் கோவிலில் வைத்து அக்சயாவை திருமணம் செய்துகொண்டார்.

இப்படியாக பரபரப்பாக திருமணம் செய்துகொண்டார் விமல். தற்போது இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here