தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படமான டிக் டிக் டிக் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகன் நடித்துள்ளார்.இப்படம் விண்வெளி வீரர்களின் பற்றிய கதையாகும்.

இந்நிலையில் அக்சய் குமார் நடிப்பில் வெளியான பேபி படத்தின் ரீமேக்  உரிமையை இயக்குனர் அஹமத் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இவர் இதற்கு முன்னர் மலையாளத்தில் வெற்றி பெற்ற ப்ரேமம் படத்தில் பணிபுரிந்தவர் ஆவார்.மேலும் அதில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஆனால் படக்குழு சம்பந்தபட்டவர்களோ ஜெயம் ரவி தரப்பிடமிருந்தோ எந்த வித அதிகார பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

முன்பு தனது அண்ணன் மோகன் ராஜா  இயக்கத்தில் நடித்து கொண்டிருந்தார் ஜெயம் ரவி. பெரும்பாலும் ரீமேக் படங்களிலேயே நடித்ததால் மோகன் ராஜாவை ரீமேக் இயக்குநர் என்றும் ஜெயம் ரவியை ரீமேக் நடிகர் என்றும் அழைத்தனர்.

ஆனால் நடிகராக ஜெயம் ரவியும் இயக்குனராக மோகன் ராஜாவும்  நிரூபித்த படம் என்றால் தனி ஒருவன் படம்தான். மீண்டும் அப்படி ஒரு படம் கொடுப்பதாக  எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு  ஏமாற்றத்தை தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here