இந்திய அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை நிறைவு செய்துள்ளது.முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்திய அணி கடைசி போட்டியில் வென்று தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது.அடுத்ததாக ஒருநாள் போட்டிகளை முடித்து விட்டு தென்னப்பிரிக்கவிற்கு எதிராக மூன்று இருபது ஒவ்பேர் போட்டிகளில் விளையாட உள்ளது.இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் சமீப காலமாகவே இந்திய அணியிலிருந்து ஒதுக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா தென்னப்பிரிக்விகாற்கு எதிரான இருபது ஓவர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த சையது முஸ்தாக் அலி கோப்பையில் ஒரு சதம் ஒரு அரை சதம் உட்பட 300 ரன்களுக்கு மேல் குவித்திருந்தார்.இதுவே இவர் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய காரணமாக அமைந்துள்ளது.

இருபது ஓவர் போட்டிகளில் நன்றாக விளையாடும் பட்சத்தில் இவர் நிரந்தரமாக இந்திய அணியில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது என தெரிகிறது.தென்னப்பிரிக்கவிற்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டி பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இருபது ஓவர் போட்டிக்கான முழு அணி விவரம்:

விராத் கொஹ்லி,ரோஹித் ஷர்மா,சிகர் தவான்,கேஎல் ராகுல்,சுரேஷ் ரெய்னா,டோனி,தினேஷ் கார்த்திக்,ஹர்திக் பாண்டியா,மனிஷ் பாண்டே,அக்ஷர் படேல்,சஹால்,குல்தீப் யாதவ்,புவனேஸ்வர் குமார்,பும்ரா,உனட்கட்,ஷர்தல்தாகூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here