தமிழ் சினிமாவின் தயாரிப்பு சங்கம் பல நாட்களாகவே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.நடிகர் விஷால் தயாரிப்ப்பு சங்க தேர்தலில் போட்டியிட்ட நாள் முதல் பல பிரச்சனைகள் தயாரிப்பு சங்கத்தின் மேல் விழுந்துள்ளது.தற்போது மலேசியாவில் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சியில் கூட அதிகப்படியான பிரச்சனைகளை சந்தித்தது.அதிகப்படியான கூட்டம் இல்லாததால் நடிகர் சங்கம் நடத்திய கலை நிகழ்ச்சி அந்த அளவிற்கு சுவாரஸ்யம் இல்லாமல் போனது ஆனால் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை நிகழ்ந்துள்ளது.

வரும் மார்ச் 1-ம் தேதி முதல் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இதனால் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் எனவும் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாது எனவும் கூறப்படுகிறது.

எனவே தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ள தல தளபதி படங்கள் தள்ளி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.தியேட்டர்களில் படங்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பும் QUBE மற்றும் UFO நிறுவனங்கள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதால், இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here