உலக சினிமாவிலிருந்து உள்ளூர் சினிமாவரை பெண் வேடம் இட்டு நடிகர்கள் நடிக்கிறார்கள் என்றால் அந்த படத்திற்கு மிகபெரிய வரவேற்ப்பு கிடைக்கும். அது போல இந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்து அந்த படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.

ஏன் தமிழ் சினிமாவில் கூட ஆரம்ப காலம் முதல் இப்பொழுது வரை  பெண் வேடத்தில் நடித்து விருதுகளை அள்ளி உள்ளனர். இவற்றில் பலருக்கும் எடுத்துக்காட்டாக இருபது நடிகர் கமல் நடித்த ஔவை ஷண்முகி படம். பெண் வேடம் என்றால் இந்த படம் தான் இன்றும் நம் நினைவிற்கு வரும்.

இறுதியாக பெண் வேடத்தில் தமிழில் முன்னணி நடிகர் சிவ கார்த்திகேயன் நடித்த ரெமோ  படம் பெரும் வெற்றியை பெற்றது. ஆனால் மலையாள திரை உலகில் பெரிய நடிகர்கள் யாரும் பெண் வேடம் அணிந்து நடித்ததில்லை.

மலையாள நடிகர் ப்ரிதிவ் ராஜ், ஜெய் ராம் போன்ற சொற்ப நடிகர்கள் மட்டுமே பெண் வேடத்தில் நடித்துள்ளனர். அந்த வருசையில் தமிழில் 2011 இல் வெளியான சீடன் படித்தால் நடித்த மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்க உள்ள படத்தில் பெண் வேடமிட்டு நடிக்க உள்ளார்.

சீடன் படத்திற்கு பின்னர் மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் 2016இல் தெலுங்கில் வெளியான ஜூனியர் என் டி ஆர் நடித்த ஜனதா காரேஜ் பாடத்தில் ஒரு முக்கிய ரோலில்நடித்தார்.

இப்பொழுதும் மலையாளத்தில் பெண் வேடத்தில் சாணக்கிய தந்திரம்   என்ற படத்தில்  நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்தின் பெயர் கரிஷ்மா அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மலையாள திரை உலகில் வெளியாகி உள்ளது. இதனால் மலையாள ரசிகர்கள் இதனை இணையத்தில்   வைரலாக்கி வருகின்றனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here