நடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அனுசுயா பரத்வாஜ் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தெலுங்கு நடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அனுசுயா பரத்வாஜ் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். அனுசுயா தார்னாகா பகுதியில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். தாயின் வீட்டில் இருந்து வெளியே வந்த அனுசுயாவை சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார்/

அனுசுயாவை பார்த்த சிறுவன் தனது தாயிடம் இருந்த செல்போனை வாங்கிக் கொண்டு சென்று நான் உங்கள் ரசிகன் ஒரு செல்ஃபி எடுக்கலாமா என்று கேட்டுள்ளார்.சிறுவன் என்று கூட பார்க்காமல் அனுசுயா அவர் கையில் இருந்த செல்போனை பறித்து கீழே வீசிவிட்டு சென்றுள்ளார். இதில் செல்போன் சேதம் அடைந்துள்ளது.

சிறுவனின் தாய் நேராக தார்னாகா காவல் நிலையத்திற்கு சென்று அனுசுயா மீது புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.புகழ் பெரும் வரையில் ஒரு குணத்தையும் புகழ் பெற்ற பின்னர் மற்றொரு குணத்தையும் வெளிக்காட்டும் செயல்கள் தற்போது அதிக அளவில் நடந்து வருவதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here