BiggBoss நிகழ்ச்சி முடிந்தும் மக்கள் இன்னும் அவர்களை மறக்கவில்லை , சிலருக்கு சினிமா வாய்ப்புகளும்  சிலருக்கு மற்ற நிகழ்ச்சி வாய்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளது. அவ்வாறு ஜுலி இப்பொழுது பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கு கொள்ள உள்ளார்.

BiggBoss என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. வீர தமிழச்சி என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பாராட்டப்பட்ட இவர் இந்த நிகழ்ச்சி மூலம் அப்பெயரை கெடுத்துக் கொண்டார்.

இவர் அடுத்த என்ன செய்ய போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ஜுலி கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமிட்டாகியுள்ளார்.

திங்கள் முதல் வெள்ளி வரை அவரது ஷோ ஒளிபரப்பாக இருக்கிறதாம். ஜுலி தொகுத்து வழங்க இருக்கும் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இதற்காக கலா மாஸ்டர் உடன் சந்தித்து இவர் தானாக சான்ஸ் கேட்டதாக உண்மை வெளிவந்துள்ளது ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here