காதல் மாதமான பிப்ரவரி மாதத்தில் ராசிகளின் சுக்கிர திசையில் மாற்றம் நிகழும் , இந்த மாற்றத்தினால் உங்களுக்கு என்ன நிகழ போகிறது என்பதை கிழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

காதல் கிரகம் சுக்கிரன், காதலர் தினம் கொண்டாடும் பிப்ரவரி மாதத்தில் மகர ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடம்பெயர்கிறார். பிப்ரவரி 6ஆம் தேதியன்று சுக்கிர பெயர்ச்சி நிகழ உள்ளது.

சுக்ரன் அடிக்கடி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். பிப்ரவரி மாதம் சனியின் வீடான கும்பத்தில் சூரியன், புதனோடு இணைந்து சில தினங்கள் கூட்டு குடித்தனம் செய்வார்.

இந்த சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எந்த

மேஷம்

கும்பம் ராசிக்கு 11வது இடத்தில் அமரப்போகிறார் சுக்கிரபகவான். பிப்ரவரி மாதம் 06ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது மனைவியால் பண வரவை அதிகரிக்கச் செய்யும். லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் உங்களுக்கு பல வழிகளில் இருந்தும் பணம் வரும். உங்கள் உறவினர்கள், வீட்டில் உள்ளவர்களுடன் கூடி மகிழ்ந்திருப்பீர்கள். காதல் மாதமான பிப்ரவரியில் உங்கள் காதலி அல்லது மனைவியுடன் சந்தோசமாக உற்சாகமாக கொண்டாட்டத்தை அனுபவிக்கலாம். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை தேவியை வணங்குங்கள்.

ரிஷபம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10வது இடத்தில் அமரப்போகிறார். தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளது உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலை பார்க்கும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாகவும் அன்பாகவும் பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே ஏற்படும் சின்னச்சின்ன சச்சரவுகளை எளிதாக ஹேண்டில் செய்யுங்கள். லட்சுமி தேவியை வெள்ளிக்கிழமைகளில் வெண்தாமரை மலர்களால் அர்ச்சித்து வணங்குங்கள்.

மிதுனம்

மிதுனம் ராசிக்கு 9ஆம் இடமான கும்பத்தில் அமர்க்கிறார் சுக்கிரன். குடும்பத்திலும் தொழிலில் பாட்னர்களுடனும் உறவு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். 9 ஆம் இடத்தில் சுக்கிரன் வர இருப்பதன் மூலம் நீண்ட பயணத்திற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தோடு சுற்றுலா சென்று வரலாம். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலர் தினத்தில் இனிய பயணங்களை மேற்கொள்ளலாம்.

கடகம்

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் அமர்கிறார் சுக்கிரன். கடகம் ராசிக்காரர்களுக்கு உடல் நலம் சற்றே பாதிப்படையும். உடல் நலத்தில் கவனம் அவசியம். வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். அதிகம் கவலைப்படாதீர்கள் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். பரிகாரம் இருக்கிறது. நவகிரகங்களில் சுக்கிரபகவானுக்கு வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடலாம். வெள்ளை ஆடை அணியலாம்.

சிம்மம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் அமரப்போகிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகளை அதிகரிக்கும். சிலருக்கு காதல் மணியடிக்கும் காலமாகும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும் எதையும் எழுத்துப்பூர்வமாகவே ஹேண்டில் செய்யுங்கள். சிறிய அளவில் உடல்நலக்குறைவு பாதிக்கப்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கும். தீய பெண்களில் நுழைவு வாழ்க்கை சிக்கலை உண்டு பண்ணிவிடும். வெள்ளிக்கிழமை தாயாரை வெண் தாமரை மலர்களினால் அர்ச்சனை செய்யவும்.

கன்னி

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறையப் போகிறார். உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய காலமிது. பணியிடங்களில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலமிது. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். சிவபெருமானை வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்வதன் மூலம் பாதிப்புகள் குறையும்.

துலாம்

காதல் நாயகனும் ராசி நாதனுமாக சுக்கிரன் துலாம் ராசிக்கு 5ஆம் இடத்தில் அமரப்போகிறார். இதன் மூலம் காதல் உணர்வுகள் அரும்பும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்களின் துணை மீது காதல் மழை பொழியும் நேரமிது. கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். இந்த வேலன்டைன்ஸ் டேயில் காதலர்கள் டோண்ட் ஒர்ரி… பீ ஹேப்பி என்று பலர் கூறிக்கொண்டு கெத்தாக இருக்கலாம். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்பதால் உங்கள் காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்கு 4வது இடத்தில் சுக்கிரன் அமர இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் யோசித்து வாங்க வேண்டும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. மனைவி குழந்தைகளினால் மகிழ்ச்சி ஏற்படும். சிவபெருமான் பார்வதியை பச்சரிசி கொண்டு வணங்கலாம்.

தனுசு

தனசு ராசிக்கு 3வது வீடான கும்ப ராசியில் குடியேரப்போகிறார். மாத நடுவில் சூரியனுடனும் புதனுடனும் கூட்டுக்குடித்தனம் செய்கிறார். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும். எனவே அவ்வப்போது கவனம் தேவை. எதிரிகள் அமைதியடைவார்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் வாகன பயணத்தில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வணங்குங்கள்.

மகரம்

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் அமரப்போகிறார். மனைவி உடனான உறவில் உற்சாகம் பிறக்கும். வீட்டில் சந்தோச அலைகள் வீசும் காலமிது. சிலருக்கு காதலர் தினம் கொண்டாட்டமாக அமையும். தொழில் நண்பர்களுடன் உறவு மேம்படும். வீட்டில், சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பேசும் வார்த்தைகளில் இனிமை அதிகரிக்கும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.வெள்ளிக்கிழமைகளில் வெண் சந்தனத்தை சிலருக்கு தானமாக தரலாம்.

கும்பம்

உங்கள் ராசியில் அமரப்போகிறார் சுக்கிரன். தங்கம், நகைகள் சேர்க்கை ஏற்படும். உணவில் கவனம் தேவை.சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். வங்கியில் பணமிருந்தாலும் அவ்வப்போது அக்கவுண்ட்டை செக் செய்து கொள்ளுங்கள். எதிரிகளிடம் சற்றே கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் குங்குமப்பூ கலந்த பாயசத்தை துர்க்கா தேவிக்கு நிவேதனம் செய்தது வழிபட வேண்டும்.

மீனம்

உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் சுக்கிரபகவான் அமர்ந்துள்ளார். இது சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். சிலர் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். எந்த பிரச்சினை என்றாலும் புத்திசாலித்தனமாக சமாளியுங்கள். உங்கள் செலவுகளை சுப செலவுகளை மாற்றுங்கள். சிறு குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கித்தரலாம்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here