விவோ v5 வழங்கும் பிக் பாஸ் இது உங்களில் நான் என்றலே நமக்கு நினைவுக்கு வருவது  ஆண்டவர் கமல்ஹாசன் தான் அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை பெரிதுபடுத்தி விட்டவர். பிக்  பாஸ் சீசன் 1 முடிந்த நிலையில்   பலரும் எதிர் பாராத  நிலையில் ஆரவ்   வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது

உலக புகழ் பெற்ற இந்த  நிகழ்ச்சியின் 2வது சீசனை தொகுத்து வழங்கப்போகும் பிரபலம் யார் என்று நிறைய கேள்விகள் எழுப்பப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு  முன்பு அது விஜய் சூர்யா இவர்கள் தான் என பல கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் கமல்ஹாசன் அளவிற்கு யார் அப்படி கூறுவார், அவரை போல் பேசக்கூடிய பிரபலம் இருக்கிறாரா என்று ரசிகர்களும் பல கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

ஆனால் தற்போது  இரண்டாம் சீசனுக்காக அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஜூன் மாதம் பிக் பாஸ்-2 சீசனுக்காக அறிவிப்புகள் வெளியாகும். முதல் சீசனில்  இந்த நிகழ்ச்சிக்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் பின்னர் ஒரு வழியாக இந்த எதிர்ப்புகள் அடங்கிய பிறகு மக்களும் ரசிக்க துவங்கினர். மேலும், இரண்டாவது சீசன் எப்போது துவங்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த சீசனை தொகுத்து வழங்க இரண்டு பிரபல நடிகர்கள் தேர்வு செயப்பட்டுள்ளனர். ஒன்று, நடிகர் சூர்யா இன்னொன்று நடிகர் அரவிந்த்சாமி. இருவருமே இதற்கு முன்னர், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீசனிலும் அதே போல் 15 போட்டியாளர்கள் பங்கு கொள்வார்கள். அதேபோல் விஜய் டீவியின் சர்ச்சை தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினியும் கலந்து கொள்வார் என தெரிகிறது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here