சிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் படம் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கிறார்.இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இடம்பெறும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் இந்த திரைப்படம் அடுத்த வருட தொடக்கத்தில் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் தற்போது வேறு அளவில் சென்று கொண்டிருப்பது மற்ற சக நடிகர்களிடையே பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here