தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் தளபதி எனும் மெகா ஹிட் படத்தில் நடித்தவர் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி. இயக்குநர் ராம் இயக்கத்தில்,மம்முட்டி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பேரன்பு’. முதலில், மம்முட்டியிடம் ராம் கதையைச் சொன்னபோதே கண்கலங்கியவர், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட மலையாளப் படத்துக்கான கால்ஷீட் தேதிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, ‘பேரன்பு’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை தேனப்பன் தயாரித்திருக்கிறார். இதில், மம்முட்டிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருக்கிறார்.

மூன்றாம் பாலினமான திருநங்கை ஒருவரும், தங்க மீன்கள் படத்தில் நடித்த சிறுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஏற்கெனவே அப்பா, மகளுக்கான உறவை ‘தங்க மீன்கள்’ படத்தில் படம்பிடித்துக் காட்டி உருகவைத்த ராம்,  ‘பேரன்பு’ படத்தில் அதற்கும் ஒருபடி மேலேபோய், கலங்கடித்திருக்கிறாராம்.

தற்போது இந்த திரைப்படம் நெதர்லாந்தில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தயாராகி உள்ளது.இவ்வாறு இந்த பேரன்பு திரைப்படத்தின் முதல் உலக பிரத்யேக காட்சி 27-ம் தேதி ரோட்டர்டாம் நகரின் பாதே திரையரங்கில் திரையிடப்படவுள்ளதாகவும். மேலும், இரண்டு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டதற்குப்பின் கோடை விடுமுறையில் ‘பேரன்பு’ திரைக்கு வரும் எனவும், ரசிகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி எனவும் தங்கமீன்கள் இயக்குநர் ராம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில்,’பேரன்பு’ திரைப்படத்தை இயக்குநர் பாரதிராஜாவுக்கு தனியாகத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். பல காட்சிகளில் மம்முட்டியின் நடிப்பைப் பார்த்து கதறி அழுதிருக்கிறார் பாரதிராஜா. பின்னர், படம் முடிந்து வெளியில் வரும்போது, இயக்குநர் ராமின் கைகளைப் பிடித்து நெகிழ்ந்துபோய் பாராட்டியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here