நடிகர் விஜய் மற்றும் அஜித் படங்கள் விசேச நாட்களில் மோதுவதும் அதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுவதும் வழக்கம்.பெரும்பாலும் ரஜினி கமல் போட்டி காலங்கள் முடிந்ததால் தற்போது பெரிதாக எடுத்துகொள்ள படுவது அஜித் மற்றும் ரஜினியின் படங்களே.ஆனால் தற்போது மீண்டும் ரஜினி மற்றும் கமல் படங்கள் திரையில் மோதவிருக்கின்றன.ஏற்கனவே ரஜினி அரசியலுக்கு வருவதால் அதற்கு முன்னரே அரசியல் அறிவிப்பை வெளியிட்ட கமலும் தற்போது அரசியல் போட்டியில் உள்ளனர்.இந்த நிலையில் தற்போது இவர்களின் திரைப்படங்கள் மோதவிருக்கின்றன.

உலக நாயகன் கமல் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் ஒரே நாளில் வெளியாகினால் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும். அந்த வகையில் இதுவரை ரஜினி – கமல் படங்கள் 14 முறை ஒரே நாளில் வெளியாகியுள்ளன. இறுதியாக ரஜினி நடித்த சந்திரமுகி திரைப்படமும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் நேருக்குநேர் மோதின.

தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகலாம் என செய்தி வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் ரஜினி,  ரஞ்சித் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘காலா’. இப்படத்தில், சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்து நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதேசமயம் கமலின் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வரூபம் படத்தின் ரீரிக்கார்டிங், டப்பிங் போன்ற இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆண்ட்ரியா, பூஜா குமார் உட்பட முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்களும் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதம் இப்படத்தையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ரஜினி நடித்திருக்கும் காலா திரைப்படம் எப்போது ரிலீஸ் என்பது இன்று இரவு 7 மணிக்கு தனுஷ் ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவிக்கப்படும் எனத்தெரிகிறது.பெரும்பாலும் இந்த திரைப்படம் விஸ்வரூபம் உடனே வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here