நித்யானந்தா ஆசிரமத்துக்கு வந்துகொண்டிருந்த நடிகை ரஞ்சிதாவின் கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்திலிருந்து ரஞ்சிதா வேறொரு காரில் எஸ்கேப் ஆகியுள்ளார்.

பெங்களூர் நெலமங்களா அருகே சொகுசுகாரில் ரஞ்சிதாவும், நித்யானந்தாவின் சீடர்களும் நேற்று காரில் வந்துகொண்டிருந்தனர்.

திடீரென அவர்களது கார் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதனால் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர்கள் கீழே விழுந்ததை அவதானித்து ரஞ்சிதாவின் கார் நிற்காமல் சென்றுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காரை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்தனர். காரில் இருந்தது நித்யானந்தாவின் சீடர்கள் என்று தெரியவந்ததும் மக்கள் அவர்களை தாக்க தொடங்கினர்.

ரஞ்சிதாவுடன் வந்த நித்யானந்தாவின் சீடர் ஒருவர் ரஞ்சிதாவை வேறொரு காரில் பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து நெலமங்களா பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிழே புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here