நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “ஸ்கெட்ச்”.நடிகர் விக்ரம் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.திரைத்துறையை பொறுத்தவரை அதிகமாக வெறுக்கப்படாத ஒரு ஹீரோவாக நடிகர் விக்ரம் உள்ளார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தெலுங்கில் வெளியான “அர்ஜுன் ரெட்டி” என்ற மெகா ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.தமிழில் இந்த படத்திற்கு வர்மா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கவுள்ளார்.ஒரு எதார்த்தமான இயக்கதிறனை கொண்ட பாலாவுடன் நடிகர் விக்ரமின் மகன் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கப்போவதால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், நடிகர் விக்ரம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்து கேட்கபட்ட கேள்விக்கு பதிலளித்த விக்ரம் கூறியதாவது, ” அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் கதை மற்றும் இயக்குனர் கையாண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது. என் மகன் இந்த படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் நான் நடித்திருப்பேன்” என்று ஒரே போடாக போட்டுள்ளார்.

இந்த படத்தில் நடிக்க இளமையான கதாநாயகன் தான் சரியான பொருத்தமாக இருப்பார். ஆனாலும், என்னால் நடிக்கக் முடியும் என்று விக்ரம் கூறியுள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.இதனை கேட்ட விக்ரம் ரசிகர்கள் சியான்-னா சும்மாவா..! என்று கூறிவருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here