நேற்று முன்தினம் மகா சிவராத்திரி என்பதால்,பக்தர்கள் ஏராளமானோர் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று கடவுளை வழிப்பட்டு சென்றனர். பலரும் கோவிலில் மறந்தபடி,சிவா மந்திரத்தை ஓதி, சாமி கதைகளை காதால் கேட்டும், சிறப்பு பூஜையில் பங்கேற்றும் வேண்டுதலை முன் வைத்தனர்.

இந்நிலையில்,சத்தீஸ்கர் மாநிலம் நுனேரா என்ற கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் 28 வயது மதிக்கத்தக்க சீமா பாய் என்ற பெண் தனது கணவருடன் சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக,அவரது கணவர் கண் முன்னே அருகில் இருந்த ப்ளேடை எடுத்து தனது நாக்கை அறுத்து கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தினார். இதனை பார்த்த மற்ற பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், அவருடைய கணவர் மிகவும் பதறிபோய் மனைவியை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளார்., ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு சென்ற அவரது மனைவிக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here