ரசிகர்களால் தல என அன்போடு அழைக்கபடுபவர் நம்ம அஜித்  இவர் எந்த நிகழ்சிகளுக்கும் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளுக்கும் செல்லவில்லை என்றாலும் கூட இவரது கை அசைவிற்காக ரசிகர் கூட்டம் காத்து கிடக்கிறது. ஒரு ஒரு படத்திற்கும் நாளுக்கு நாள் வரவேற்ப்பு கூடிக்கொண்டே செல்கிறது.

அஜித் என்றால் இன்று பலருக்கு இன்ஸ்பிரேஷன். இன்றுவரை சினிமா துறையில் உள்ளவர்களுக்கே மிகவும் பிடித்த நடிகராக உள்ளவர்.  இந்த காதலர் தினம் அவருக்கு எவ்வளவு முக்கியமான நாள் தெரியுமா?. ஆம் அவருக்கும் காதல் திருமணம் தானே.

அமர்க்களம் படத்தின் மூலம் அவர்களின் காதல் வளர தொடங்கியது. அஜித் தன் செலவில் ஒரு பூங்கொத்தை ஷாலினிக்கு வாங்கி கொடுத்த அந்த நிஜமான நிகழ்வுகள் படத்திலும் காட்சிகளாக்கப்பட்டது.

மேலும் அஜித்தின் பிறந்த நாளுக்காக நள்ளிரவு 12 மணிக்கு போன் கால் மூலம் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார் ஷாலினி. அப்படியே வாசல் சென்று பார்த்த அஜித்துக்கு காத்திருந்தது ஒரு பெரிய சர்ப்பிரைஷ்.

ஷாலினி ஒரு கார் டிக்கி நிறைய பரிசு பொருட்களை இயக்குனர் மூலமாக கொடுத்தனுப்ப, அதை பிரித்து பார்த்து அஜித் அப்படியே கண்கலங்கியுள்ளார். உள்ளிருந்த அத்தனையின் அவர் தனக்கு என்னென்ன பிடிக்கும் என்று சொன்னாரோ அது அனைத்தும் இருந்திருக்கிறது. மேலும் அஜித்தின் ரியாக்சன் ஒவ்வொன்றும் ஷாலினிக்கு தகவலாக சென்றுள்ளது.

நடிகர் நடிகைகள் சேர்ந்து திருமணம் செய்துகொண்டு பிரிவது சினிமா துறையில் வழக்கமான ஓன்று தான் , ஆனால் இந்த ஜோடி இன்றுவரை அனைவரும் பொறாமை படும் அளவிற்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here