நடிகர் சூர்யாவின் மனைவியும் தமிழ் சினிமா நடிகையுமானவர் ஜோதிகா.இவர் ஒரு காலத்தில் தனது தேர்ந்த நடிப்பின் மூலம் இவருக்கென தனியே ஒரு ரசிகர் பட்டாளம் கொண்டிருந்தார்.சூர்யாவுடன் திருமணம் முடிந்த பின் நடிப்பதை நிறுத்திய ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு ரீ என்ட்ரி கொடுத்தார்.

ஜோதிகா மும்பையை சேர்ந்தவர் என்பதால் ஜோதிகா வீட்டில் ஹோலி கொண்டாடப்பட்டது. மேலும், விஜய் டிவி தொகுப்பாளினி டிடி ஜோதிகாவின் நெருங்கிய தோழியாவார். இந்த ஹோலி பண்டிகைக்கு ஜோதிகா வீட்டிற்கு சென்றிருந்தார் டிடி.

அங்கு சென்ற போது டிடி தன் கண்ணால் பார்த்த விஷயங்களை தற்போது கூறியுள்ளார், பண்டிகை கொண்டாடப்படும் முன்னர் வீட்டில் வேலை செய்யும் அணைவரையும் அன்பாக அழைத்து முதலில் அவர்களுக்கு உணவு பரிமாறியுள்ளார் ஜோதிகா. நிறைய பேர் இருந்தும் பண்டிகை நாளில் தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு முதலில் சாதம் பரிமாறியுள்ளார்.

மேலும், அவர்கள் சாப்பிடும் வரை மற்றவர்களை கவனித்துக்கொண்டும் குழந்தைகளை பார்த்துக்கொண்டும் பொறுப்பான அம்மாவாக இருந்து அனைத்து வேலைகளையும் ஜோதிகாவே செய்துள்ளார். இதனை பார்த்து பிரம்பித்துப் போய் தற்போது கூறியுள்ளார் திவ்யதர்ஷினி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here